சனி, 19 அக்டோபர், 2024

சொல்லறி திறன் போட்டி 11

  

து

1

லை

 

சீ

2

றா

ப்

பு

ரா

ம்

ம்

 

ன்

 

 

 

ம்

 

 

பை

3

ம்

பொ

ழி

ல்

 

வே

4

ய்

 

க்

 

5

ம்

ர்

 

 

கா

 

பா

கு

6

க்

செ

7

 

 

கா

8

ரை

க்

கா

ல்

கை

பா

9

 

10

 

ல்

 

ரை

 

11

 

ம்

 

ரு

 

வா

 

சு

12

ளை

 

 

13

டு

க்

கா

14

ய்

 

 

 

ரி

 

ங்

 

15

ளி

 

னை

சு

16

 

 

நு

17

ல்

 

 

சி

18

ங்

கு

19

விடைகள்

இடமிருந்து வலம்: 1. ஐப்பசி மாதத்தின் தமிழ்ப் பெயர் (துலை), 2. உமறுப் புலவர் எழுதிய நூல் (சீறாப்புராணம்), 3. குற்றாலத்தின் அருகில் உள்ள இயற்கை எழில் மிகுந்த ஊர் (பைம்பொழில்), 4. மூங்கிலைக் குறிக்கும் இன்னொரு சொல் (வேய்), 5. ஏரெழுபது என்னும் நூலை இயற்றியவர் (கம்பர்), 8. புதுச்சேரியின் மாவட்டங்களில் ஒன்று (காரைக்கால்), 12. பலாப்பழத்தில் தின்னும் பகுதி (சுளை), 13. இந்தக் காயில் அகணி (உட்பகுதி) நஞ்சு, சுக்கில் புறணி (மேல்தோல்) நஞ்சு (கடுக்காய்), 15. அரிசி, சோளம், கேழ்வரகு, உழுந்து ஆகியவற்றின் மாவைக் கொதிக்கும் நீரிலிட்டுக் கிண்டிச் செய்யும் உணவு (களி), 17. மணலுள் புதைந்திருக்கும் தவளை வகை (நுணல்), 18. சொறியத் தூண்டும் தோல்நோய் (சிரங்கு).

வலமிருந்து இடம்: 7. எண்ணெய் ஆட்டப் பயன்படும் கருவி (செக்கு), 9. கோணத்தின் அளவைக் குறிக்கும் தமிழ்ச்சொல் (பாகை), 16. பாறைகளிடையே தோன்றும் நீரூற்று (சுனை).

மேலிருந்து கீழ்: 1. வெண்மைக்கு எடுத்துக்காட்டாக இதன் பூவைச் சொல்வர் (தும்பை), 6. பாறைகளில் விலங்குகளும் மனிதரும் வாழும் பொந்து (குகை), 8. ஆற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் வரும் வழி (கால்வாய்), 10. வானம் கருக்கும் மாலை நேரம் (கருக்கல்), 14. கருநிறத்தவள் எனப் பொருள்படும் பெண் தெய்வம் (காளி).

கீழிருந்து மேல்: 4. இலை, பூ, காய், பட்டை, கொட்டை ஆகியவற்றில் கசப்புச் சுவையுடைய மருந்து மரம் (வேம்பு), 6. ஐம்பொன் வகைகளில் ஒன்று (செம்பொன்), 11. தமிழ்நாட்டில் அணுவுலை உள்ள ஊர்களில் ஒன்று (கல்பாக்கம்), 12. கொடியில் காய்க்கும் நீர்ச்சத்துள்ள காய் (சுரைக்காய்), 17. சென்னையில் வானிலை ஆய்வு நிலையம் அமைந்துள்ள ஊர் (நுங்கம்பாக்கம்), 18. கருவுண்டாதல், கருமுட்டை ஆகியவற்றைக் குறிக்கும் சொல் (சினை), 19. சோற்றுக்கற்றாழையின் பெயர் (குமரி).

பதினோராம் போட்டிக்கான சரியான விடைகளைத்  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோவன்குளம் பாலாஜி,

சென்னை தா.ரஜனி பாலா ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை 1000 ரூபாய் இருவருக்கும் 500 ரூபாயாகப் பகிர்ந்தளிக்கப்படும். தொடர்ந்து போட்டியில் பங்கேற்று ஊக்கப்படுத்துங்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்,

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் வேல்கனி ஆகியோர் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக