திங்கள், 28 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 20

 

கு

1

ல்

வா

ய்

மொ

2

ழி

 

பொ

3

தி

4

று

 

வி

 

பா

5

ட்

டா

ளி

 

ரு

ம்

கா

6

 

டு

ட்

ற்

நெ

7

 

வா

8

யா

டி

 

 

 

ல்

லா

 

 

 

டு

கா

9

க்

டை

ட்

வே

10

 

11

ம்

மை

 

றை

12

 

 

லி

 

 

ம்

 

து

த்

வா

13

 

 

ல்

ந்

ப்

மு

14

 

ணி

15

கா

16

 

ந்

 

ப்

 

 

 

னி

 

ரு

டி

ட்

17

 

கு

18

ன்

றி

மு

19

த்

து

விடைகள்

இடமிருந்து வலம்: 1. திருக்குற்றாலத்து இறைவியின் பெயர் (குழல்வாய்மொழி), 3. பருத்திப் பஞ்சை அளவிடும் பேரலகு (பொதி), 5. உழைப்பாளிக்கு இன்னொரு பெயர் (பாட்டாளி), 8. துடுக்காக வாய் பேசுபவரை (வாயாடி) என்பர், 11. உம் என்னும் இணைப்புச் சொல்லின் பெயர் (உம்மை), 18. கருப்பு, சிவப்பு வண்ணங்களைக் கொண்ட வித்து (குன்றிமுத்து).

வலமிருந்து இடம்: 6. வனம் என்பதன் தமிழ்ச்சொல் (கானகம்), 7. சேர்த்தெழுதுக. நெல்+கட்டு = நெற்கட்டு, 10. இயற்கைவளக் கொள்ளையர்களின் (வேட்டைக்காடு) ஆகிவிட்டது தமிழ்நாடு, 12. ஒளிந்துகொள், ஒளித்துவை எனப் பொருள்படும் ஏவல் வினை (மறை), 13. நீரில் நீந்தும் பறவைகளில் ஒன்று (வாத்து), 14. கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலைகளுக்குப் பெயர்பெற்ற ஊர் (முப்பந்தல்), 15. நெல், கோதுமை, பயறு ஆகியவற்றை (மணி) என்றும் கூறுவர், 17. சமைக்கப் பயன்படும் கலங்களில் ஒன்று (சட்டி).

மேலிருந்து கீழ்: 1. திருக்குற்றாலத் தலமரம் (குறும்பலா), 2. விரிவதற்கு முன் பூவின் நிலை (மொட்டு), 4. தமிழ்நாட்டில் ஐவகை நிலங்களைக் கொண்ட ஒரே மாவட்டம் (திருநெல்வேலி), 6. பூப்பூத்தும் காய் காய்க்காத மரம் (காயா), 9. சுண்ணாம்புச் சாந்தின் பெயர் (காறை), 11. நெல் குற்ற, மாவிடிக்கப் பயன்படும் கற்கருவி (உரல்), 13. கல்விக் கடவுளின் பெயர் (வாணி), 15. நீர்நிலைகளின் கரையில் செழித்து வளரும் மிகப்பெரிய மரவகைகளில் ஒன்று (மருது), 16. சோளத்தை இடித்துச் சமைத்துச் செய்யும் புளிப்பான உணவு (காடி).

கீழிருந்து மேல்: 5. கோரம்புல், ஓலை இலக்கு ஆகியவற்றைக்கொண்டு முடைவது (பாய்), 8. ஏழு வண்ணங்களைக் கொண்டது (வானவில்), 14. சேர்த்தெழுதுக. முதுமை+மக்கள்+தாழி (முதுமக்கட்டாழி). 17. இதன் கட்டை மணக்கும் (சந்தனம்), 18. திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர் (குப்பம்), 19. பேய், சினம் ஆகியவற்றைக் குறிக்கும் சொல் (முனி).

சொல்லறி திறன் 20ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரா.ஐஸ்வர்யா எழுதி அனுப்பியுள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் வேல்கனி இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார். 

சிவகாசி அரசகோவலன் மூன்றே மூன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக