சனி, 12 அக்டோபர், 2024

சொல்லறி திறன் போட்டி 7

 

பே

1

ரீ

த்

2

ம்

3

ம்

 

ம்

ரே

 

 

லை

 

சி

 

 

ழை

4

டு

மே

5

பை

ப்

கு

6

 

ளி

 

 

க்

 

ட்

 

பி

 

ள்

பா

ப்

ழ்

தா

7

 

டூ

 

ள்

8

 

ப்

 

 

த்

9

ர்

 

ளை

 

10

ல்

 

பு

11

னா

 

12

 

கை

டு

13

 

கோ

14

 

ம்

ரா

15

 

கை

 

16

டு

கு

 

இடமிருந்து வலம்: 1. அரேபிய நாடுகளில் விளையும் பழம் (பேரீத்தம்பழம்), 9. உழவர்களின் முதன்மையான கருவி (ஏர்), 10. பயற்றம் நெற்றுக்களின் உள்ளீடு (பரல்) என்றழைக்கப்படுகிறது, 16. எண்ணெய் வித்துக்களில் இதுவும் ஒன்று (கடுகு).

வலமிருந்து இடம்: 4. மூங்கிலைக் குறிக்கும் சொல் (கழை), 6. பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தை அரசு (குப்பைமேடு) ஆக்கிவிட்டது, 7. கதவின் பூட்டு (தாழ்ப்பாள்), 8. தென்னை, பனை, ஈந்து ஆகியற்றின் பாளைகளில் இருந்து வடிப்பது (கள்), 13. இடுக்கமான தெரு (இடுகை), 15. திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றெனக் கருதப்படுவது (வராகம்).

மேலிருந்து கீழ்: 1. கணக்கெழுதும் ஏடுகளில் ஒன்று (பேரேடு), 2. குடும்பத்தில் முதற்பிள்ளை (தலைப்பிள்ளை), 3. (பசி) வந்திடப் பத்தும் பறந்துபோம், 5. தமிழ்நாட்டின் பெரிய அணை இங்குள்ளது (மேட்டூர்), 9. கோதாவரிக் கழிமுகத்தில் உள்ள புதுச்சேரி மாநிலப் பகுதி (ஏனாம்), 10. ஆற்றுச்சமவெளியின் பெயர் (படுகை), 12. பகல் என்பதன் எதிர்ச்சொல் (இரா), 14. மலை, குன்று எனப் பொருள்படும் மற்றொரு சொல் (கோடு).

கீழிருந்து மேல்: 11. புதியன செய்தல் (புத்தாக்கம்), 13. பிச்சை எடுப்பவர் (இரப்பாளி).
இந்தப் போட்டியை நூற்றுக்கு மேற்பட்டோர் பார்த்துள்ள போதிலும் இதற்கான விடைகளைத் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் செ.வேல்கனி,
நான்குனேரி வட்டம் பாரதிநகர் திலகவதி ஆகிய இருவரே எழுதி அனுப்பியுள்ளனர். 
வேல்கனி மூன்றே மூன்றைத் தவிர மற்ற விடைகளைச் சரியாக எழுதியுள்ளார்.
திலகவதி ஏழே ஏழைத் தவிர மற்ற விடைகளைச் சரியாக எழுதியுள்ளார். அவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டிகளில் அனைவரும் தொடர்ந்து பங்கேற்று ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக