தி 1 |
ரு |
வை 2 |
கு |
ண் |
ட |
ம் |
|
தி |
பொ 3 |
ரு |
|
க் |
|
வ 4 |
ட் |
ட |
ம் |
|
ரு |
ந |
|
கோ |
|
க 5 |
ள் |
ளி |
|
கொ 6 |
ள் |
ள் |
|
ல் |
ஆ 7 |
|
தா 8 |
ள் |
|
டி |
|
ளா |
க 9 |
|
|
|
|
கொ 10 |
டு |
மு |
டி |
று |
யா |
ளை |
வா 11 |
|
ணை |
|
ண் |
ந் |
|
|
டை |
வா 12 |
|
அ 13 |
ம 14 |
ரா |
வ 15 |
தி |
|
|
|
தோ 16 |
ணி |
|
றி |
|
|
ரி |
கா 17 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. நவத் திருப்பதிகளில் முதல் பதி (திருவைகுண்டம்),
4, ஆரம் என்னும் அளவை அடிப்படையாகக் கொண்டது (வட்டம்),
5, வறண்ட நிலத் தாவரம் (கள்ளி), 6, பயறு வகைகளில் ஒன்று (கொள்), 8, நெல், புல் ஆகியவற்றின் இலை (தாள்),
13. காவிரியின் துணையாறுகளில் ஒன்று (அமராவதி),
16. ஆற்றைக் கடக்க உதவும் (தோணி).
வலமிருந்து இடம்:
3. (பொதி) சுமக்கும் கழுதை, 7, வடமரம் எனப்படுவது (ஆல்), 9. புளிப்பான
காயுள்ள செடி (களா), 10. நொய்யலாறு காவிரியில்
கலக்கும் ஊர் (கொடுமுடி), 11. கோவை
– பாலக்காடு நகரங்களிடையே உள்ள எல்லைச்சாவடி (வாளையாறு),
12. வடக்கில் இருந்து வீசும் காற்று (வாடை),
17. சனி என்பதன் தமிழ்ப்பெயர் (காரி).
மேலிருந்து கீழ்:
1. சனீசுவரனுக்கான தலம் (திருநள்ளாறு),
2. மாட்டுத் தீவனங்களில் முதன்மையானது (வைக்கோல்),
3. (பொருள்) இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,
6. திராட்சை என்பதன் தமிழ்ச்சொல் (கொடிமுந்திரி),
14, ஆட்டுக்குட்டியின் பெயர் (மறி).
கீழிருந்து மேல்:
5. கல்லெறி கருவி (கவண்), 10. காவிரியின் முதன்மையான கிளையாறு (கொள்ளிடம்),
14. அமரும் பலகை மணை, 16. அறுகால் உயிரினம் (வண்டு), 16. கன்னியாகுமரி மாவட்டத்தில் பூச்சந்தை உள்ள
ஊர் (தோவாளை).
சரியான விடைகளை எழுதி அனுப்புவோருக்கு 1000 ரூபாய் பரிசு அறிவித்திருந்தோம். சொல்லறி திறன் போட்டி இரண்டை ஐம்பதுக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். எவருமே சரியான விடைகளை எழுதி அனுப்பவில்லை. திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்தைச் சேர்ந்த முத்துக்கணேஷ் விடைகளை எழுதி அனுப்பியிருந்தார். அவர் அனுப்பியவற்றில்,
வலமிருந்து இடம்: 9. புளிப்பான காயுள்ள செடி களா என்பதற்கு மாறாக விளா என்று குறிப்பிட்டுள்ளார். விளாங்காய் புளிப்புச் சுவையுடையது தான். களா செடியில் காய்க்கும். விளா மரத்தில் காய்க்கும்.
மேலிருந்து கீழ்: 14, ஆட்டுக்குட்டியின் பெயர் மறி என்பதற்கு மாறாக மரி என்று குறிப்பிட்டுள்ளார்.
கீழிருந்து மேல்: 14. அமரும் பலகை மணை என்பதற்கு மாறாக மர என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்றையும் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார். அவரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். இன்றைய சொல்லறி திறன் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
💕முத்து கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
பதிலளிநீக்குசொல்லறி திறன் போட்டியில் பங்கேற்றவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்தியற்கு நன்றி ஐயா
நீக்கு