ஞாயிறு, 20 அக்டோபர், 2024

சொல்லறி திறன் போட்டி 12

  

1

ங்

2

ளூ

ர்

 

பு

ம்

3

4

ணி

 

தி

 

ளூ

கொ

5

 

 

 

மே

6

லூ

ர்

 

7

டி

வா

ம்

 

 

 

கை

ங்

வே

8

 

 

 

 

லை

ல்

தி

9

 

பெ

10

ரி

கு

11

ம்

 

 

ண்

 

 

 

 

று

 

 

12

ணை

 

 

பொ

13

ரு

ந்

தா

மை

ப்

 

 

14

ரி

 

தொ

 

ம்

 

ளி

 

 

 

 

கை

15

ம்

16

சு

னே

பு

17

 

 

 

விடைகள்

இடமிருந்து வலம்: 1. கருநாடகத்தின் துறைமுக நகரம் (மங்களூர்), 6. மதுரை மாவட்டத்தில் கற்கொள்ளை நடந்த வட்டம் (மேலூர்), 7. குதிரையை வழிநடத்த அதற்குக் (கடிவாளம்) மாட்ட வேண்டும், 10. தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய நகரம் (பெரியகுளம்), 12, ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்களில் ஒன்று (அரணை), 13. பொருத்தம் என்பதன் எதிர்ச்சொல் (பொருந்தாமை), 14. கடலைக் குறிக்கும் சொற்களில் ஒன்று (உவரி).

வலமிருந்து இடம்: 4. பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உரை மருந்துகளில் ஒன்று (வசம்பு), 8. வரிப்புலியின் பெயர் (வேங்கை), 9. சிதம்பரத்துக்கு இந்தப் பெயரும் உண்டு (தில்லை), 15. பேய் என்பதைக் குறிக்கும் இன்னொரு சொல் (அலகை), 17. ஒரிசா மாநிலத் தலைநகரம் (புவனேசுவரம்).

மேலிருந்து கீழ்: 1. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று (மணிமேகலை), 2. நெல், சோளம் ஆகியவற்றின் தானியக் குலையை இவ்வாறு சொல்வர் (கதிர்), 3. உயிரற்ற பொருள் (சடம்), 5. சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் உள்ள அணை (கொடிவேரி), 9. வீட்டு முன் ஆட்கள் அமரும் இடம் (திண்ணை), 11. எட்டுத்தொகை நூல்களில் ஒன்று (குறுந்தொகை), 12. உணவுப் பண்டங்களில் ஒன்.று (அப்பம்), 13. வறுத்த அரிசி, கோதுமை ஆகியவற்றைப் (பொரி) என்பர்.

கீழிருந்து மேல்: 2. கருநாடகத் தலைநகரம் (பெங்களூர்), 15. தாய்க்கு இன்னொரு பெயர் (அம்மை), 16. ஐம்பூதங்களில் ஒன்று (வளி).

இந்தப் போட்டியில்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம் பெரும்பத்து முத்துக்கணேஷ்,

பாரதிநகர் திலகவதி,

சென்னை விருகம்பாக்கம் ஆயிஷா,

திசையன்விளை வட்டம் கோவன்குளம் பாலாஜி,

சிதம்பரபுரம் செ.வேல்கனி ஆகியோர் சரியான விடைகளை எழுதி அனுப்பியுள்ளனர். ரிசுத் தொகையான 1000 ரூபாய் ஐவருக்கும் ஆளுக்கு 200 ரூபாயாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக