செவ்வாய், 15 அக்டோபர், 2024

சொல்லறி திறன் போட்டி 9

 

தெ

1

ன்

பெ

2

ண்

ணை

 

ல்

ண்

கொ

3

ன்

 

து

 

 

 

4

டை

தி

 

ம்

 

பே

5

தை

மை

6

 

7

 

ரு

 

பை

 

 

ந்

 

 

 

ம்

வி

 

 

 

ல்

ன்

தி

8

 

தா

9

ம்

பூ

10

 

11

 

ரு

 

ங்

ங்

 

 

ச்

 

 

றி

வெ

12

 

கூ

13

கை

 

14

ம்

பா

15

 

ம்

16

ர்

 

 

 

லா

 

பா

 

ரு

 

17

ம்

 

று

யா

வை

ரு

தி

18

விடைகள் 

இடமிருந்து வலம்: 1. திருக்கோவிலூர் வழியாகப் பாயும் ஆறு (தென்பெண்ணை), 4. கொதிக்கும் எண்ணெய்யில் சுடும் பண்டம் (வடை), 5. அஞ்சுவது அஞ்சாமை (பேதைமை), 9. மடல்களுக்கு இடையில் பூக்கும் பூ (தாழம்பூ), 13. காக்கைக்கு ஆகாப் பறவை (கூகை), 14. சோழமண்டலத்தில் நெல் பயிரிடும் பருவங்களில் முதன்மையானது (சம்பா), 17. இரும்பு ஆயுதங்களைக் கூர்மையாக்க உதவும் கருவி (அரம்).

வலமிருந்து இடம்: 3. கிழக்கில் இருந்து வீசும் காற்று (கொண்டல்), 8. நால்வகை உண்டிகளில் ஒன்று (தின்னல்), 12. மது குடித்தால் வருவது (வெறி), 16. தேரிழுப்போர் (வடம்) பிடிப்பர், 18. தமிழ்நாட்டில் இசைவிழாவுக்குப் பெயர்பெற்ற ஊர் (திருவையாறு).

மேலிருந்து கீழ்: 1. மன்னராட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இப்பெயரால் அழைக்கப்பட்டது (தென்திருவிதாங்கூர்), 2. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று (பெதும்பை), 3. கொடுப்பது (கொடை), 8. மாணிக்கவாசகர் பாடியது (திருவெம்பாவை), 10. நாரால் தொடுக்கப்பட்ட பூக்கள் (பூச்சரம்), 15. தொண்டை மண்டலத்தில் பாயும் ஆறுகளில் பெரியது (பாலாறு).

கீழிருந்து மேல்: 5. கல்லணைக்கு ஆங்கிலேயர்கள் (பேரணை) என்று பெயரிட்டனர், 6. பெண்ணாசை (மையல்), 7. கோலியாத்தை வெல்லத் தாவீது பயன்படுத்திய கருவி (கவண்), 11. கேரளத் தலைநகரின் சுருக்கப் பெயர் (அனந்தை), 18. காவிரி, கொள்ளிடம் ஆறுகள் சூழ்ந்த தீவு (திருவரங்கம்).

இந்தப்  போட்டிக்கான விடைகளை இருவர் எழுதி அனுப்பியுள்ளனர். சென்னை ரஜனி பாலா ஏழைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் பனைவிளை ஐஸ்சூர்யா பன்னிரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.

போட்டியில் தொடர்ந்து பங்கேற்று ஆயிரம் ரூபாய் பரிசை வெல்ல வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக